கல்வியை இந்திய மயமாக்க ஆர் எஸ் எஸ் வேண்டுகோள்
வார்தா
கல்வியில் இந்திய தத்துவங்களை அறிமுகப்படுத்தி இந்திய மயமாக்க வேண்டும் என அரசுக்கு ஆர் எஸ் எஸ் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது
வார்தா நகரில் ஆர் எஸ் எஸ் அமைப்பின் சர்வ பவந்து சுகினா (அனைவருக்கும் சந்தோஷம்) என்னும் நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்வில் 40 பேராசிரியர்கள் க்லந்துக் கொண்டனர். அவர்கள் கல்வியை இந்திய மயமாக்குவது குறித்து விவாதித்தனர். அப்போது கல்வியை இந்திய மயமாக்க வேண்டும் என அவர்கள் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்
விவாதத்தின் முடிவில், “நம்மிடையே பல தேசியத்தலைவர்கள் உள்ளனர். உதராணமாக நானாஜி தேஷ்முக், நாராயண குரு உள்ளிட்டோர் தீண்டாமைக்கு எதிராக போராடியவர்கள் ஆவார்கள். இவர்களின் வாழ்க்கை வரலாறு பாடமாக்க வேண்டும் அத்துடன் இந்தியாவில் சாணக்கிய நீதி, சுக்ர நீதி, மற்றும் விதுர நீதி ஆகியவைகள் நம் நாட்டின் பொக்கிஷங்கள் ஆகும். இவைகளும் கல்வித் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும்.” என பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.