குடியரசுத் தலைவர் தேர்தல் : பா ஜ முடிவுக்கு ஆர். எஸ். எஸ். ஒப்புதல்

டில்லி

ஆர். எஸ், எஸ். பொறுத்தவரை குடியரசுத்தலைவர் வேட்பாளராக ப ஜ க யாரை தேர்ந்தெடுத்தாலும் ஆட்சேபம் இல்லை என அதன் தலைமை தெரிவித்துள்ளது.

தற்போதைய குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவதையொட்டி, அடுத்த தலைவராக பா ஜ க சார்பில் யார் நிறுத்தப்படுவார்கள் என்பதற்கு பல ஊகங்கள் வெளியாகின்றன.   அவர் ஆர் எஸ் எஸ் அமைப்பை சார்ந்தவராக இருக்கலாம் என பலரும் நினைக்கின்றனர்.

ஆர், எஸ். எஸ். சார்பில் மோகன் பகாவத் ஏற்கனவே பா ஜ க தலைவர்களை சந்தித்து உள்ளார். இப்போது, அவர் சார்பில் கிருஷ்ண கோபால் டில்லியில் முகாமிட்டு ராஜ்நாத் சிங், வெங்கையா நாயுடு, அருண் ஜேட்லி ஆகியோரை சந்தித்து பேச உள்ளார்.   நேரம் கிடைப்பின் அவர் நிதின் கட்காரியையும், சுஷ்மா ஸ்வராஜையும் சந்திக்க இருப்பதாக தெரிகிறது.

ஆனால் ஆர் எஸ் எஸ் தலைமையைச் சேர்ந்த பெயர் தெரிவிக்க விரும்பாத ஒருவர், ஆர். எஸ். எஸ்.  யாரையும் சிபாரிசு செய்யவில்லை என்றும்,  யாரை தேர்ந்தெடுப்பினும் ஆட்சேபம் தெரிவிக்காது எனவும் கூறி உள்ளார்.

அமித்ஷா இந்த மாதம் 20-21 தேதிகளில் குஜராத் பயணம் மேற்கொள்ளுகிறார். அவர் வந்தபின் இறுதி முடிவு எடுக்கப்பட்டு  பா ஜ க வின் குடியரசுத்தலைவர் வேட்பாளர்  24ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படலாம்.  அது வரை எல்லாமே ஊகங்கள்தான்