தாஜ் மகால் பற்றிய புது சர்ச்சை : இஸ்லாமியர் தொழுகை நடத்த ஆர் எஸ் எஸ் எதிர்ப்பு

க்ரா

தாஜ்மகாலில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தக்கூடாது என ஆர் எஸ் எஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தாஜ்மகால் பற்றிய சர்ச்சைகள் ஓயாமால் ஒவ்வொரு நாளும் ஒரு பரப்பரப்பு செய்தி வெளியாகிய வண்ணம் உள்ளது.    உ பி கையேட்டில் இருந்து தாஜ்மகாலின் பெயர் நீக்கப்பட்டது.  பின்பு அதற்கு ஒரு காரணம் சொல்லப்பட்டது.   அதன் பின் பா ஜ க வின் சட்ட மன்ற உறுப்பினர்களும்,  பாராளுமன்ற உறுப்பினர்களும் தாஜ்மகால் பற்றி பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.   அதற்கு முடிவு கட்டும் வகையில் உ பி முதல்வர் யோகி தாஜ்மகாலை பார்வையிட்டார்.    அத்துடன் தாஜ்மகாலை புகழ்ந்தும் கருத்து தெரிவித்தார்.

இந்நிலையில் ஆர் எஸ் எஸ் அமைப்பின் சரித்திரப் பிரிவான அகில பாரத இதிகாச சன்கலன் சமிதி சமீபத்தில் வெள்ளிக்கிழமை அன்று இஸ்லாமியர்கள் அங்கு தொழுகை நடத்துவதை தடை செய்யக் கோரி உள்ளது.  இது குறித்து அந்தப் பிரிவின் தலைவர் பாண்டே, “தாஜ்மகால் தேசிய சின்னம் எனவும் எந்த ஒரு மதச் சார்பும் அதற்கு இல்லை எனவும் அரசுத் தரப்பில் சொல்லப்படுகிறது.   அதே சமயம் வெள்ளிக்கிழமை அன்று தாஜ்மகால் முன்பு தொழுகை நடத்த ஏதுவாக மூடப்படுகிறது.   இதை தடை செய்ய வேண்டும்.  அல்லது அந்த இடத்தில் சிவ வழிபாடு நடத்தவும் அனுமதி அளிக்க வேண்டும்” என கூறி உள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு ஒரு இந்து அமைப்பினர் தாஜ்மகாலின் உள்ளே சிவனை பிரதிஷ்டை செய்ய முயன்று போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.   அந்தப் போராட்டத்தின் போது அங்கு சிவன் கோயில் இருந்ததாக அந்த அமைப்பினர் கூறினார்கள்.   போராட்டக்கார்கள் கைது செய்யப்பட்டு மன்னிப்புக் கடிதம் கொடுத்த பின் விடுதலை செய்யப்பட்டதாக காவல் துறை அப்போது தெரிவித்ததும் தெரிந்ததே.

Leave a Reply

Your email address will not be published.