Random image

தன் கொள்கையை ஆர் எஸ் எஸ் யார் மீதும் திணிக்காது : மோகன் பகவத்

டில்லி

னது  கொள்கையை ஆர் எஸ் எஸ் இயக்கம் யார் மீதும் திணிக்காது என இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் கூறி உள்ளார்.

டில்லியில் ”பாரத முன்னேற்றம் – ஆர் எஸ் எஸ் வியூகம்” என்னும் தலைப்பில் ஒரு மூன்று நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.   இந்த கூட்டத்தில் நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் முன்னேற்ற ஆர் எஸ் எஸ் வகுத்து வரும் திட்டங்கள் குறித்து பேசப்பட்டது.  அத்துடன் இந்த இயக்கத்தின் பணிகள் மற்றும் குறிக்கோள்கள் குறித்து மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் நவாசுதின் சித்திக்கி, மனிஷா கொய்ராலா, அனு மாலிக், பாக்யஸ்ரீ உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள்.   இந்த கூட்டத்தின் துவக்க உரையை இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் நிகழ்த்தினார்.   அப்போது மோகன் பகவத், “ஆர் எஸ் எஸ் மக்களின் முன்னேற்றத்துக்காக மிகவும் பாடு பட்டு வருகிறது.   இவைகள் குறித்து மக்கள் அறியச் செய்ய வேண்டும்.

ஆர் எஸ் எஸ் இயக்கத்தை தொடங்கிய கே பி ஹெட்கேவார் இந்த சமுதாயத்துக்கு மாபெரும் தொண்டாற்றி உள்ளார்.  அவைகள் குறித்து நாட்டு மக்களுக்கு எடுத்துரைப்பது அவசியமாகும்.   எந்த ஒரு பேரிடரிலும், சமுதாய நலப்பணியிலும் ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் முதலாவதாக சென்று பணி புரிகின்றனர்.   அதை நாம் பாராட்ட வேண்டும்.  ஆர் எஸ் எஸ் குறித்து இதுவரை அனைவரும் தவறாகவே புரிந்துக் கொண்டுள்ளனர்.

ஆர் எஸ் எஸ் எப்போதும் விளம்பரம் தேடிக் கொள்வதில்லை.   அது மட்டுமின்றி தனது கொள்கைகளை யார் மீதும் திணிப்பதுமில்லை.    இந்திய விடுதலைக்காக ஆர் எஸ் எஸ் மிகவும் பாடு பட்டுள்ளது.  அதை விட அதிகமாக காங்கிரஸ் பாடுபட்டுள்ளது.   காங்கிரசின் முக்கிய பிரமுகர்கள் பலர் சுதந்திரப் போராட்டத்தில் தங்கள் பங்களிப்பை அளித்துள்ளனர்.” என தமது உரையில் கூறி உள்ளார்.

You may have missed