சபரிமலை குறித்த புகைப்படக் கதையில் நடித்த ஆர் எஸ் எஸ் தொண்டர் கைது.
திருவனந்தபுரம்
சபரிமலையில் தன்னை மிரட்டுவது போல் ஒரு புகைப்படக் கதை அமைத்த ஆர் எஸ் எஸ் தொண்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சபரிமலையில் இளம் பெண்களை அனுமதிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதில் இருந்து நாடெங்கும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. ஆர் எஸ் எஸ் உள்ளிட்ட பல இந்து அமைப்புக்கள் இந்த உத்தரவை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறது. சென்ற மாதம் நடை திறக்கப்பட்ட போது சபரிமலைக்கு வந்த இளம்பெண்கள் திருப்பு அனுப்பப் பட்டனர்.
சபரிமலையில் போராடும் ஒரு பக்தரை அரிவாளால் வெட்ட முயற்சிப்பது போல் ஒரு சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. அந்தப் புகைப்படங்கள் மக்களிடையே கடும் பரபரப்பை உண்டாக்கின. இவ்வாறு மிரட்டியவர்கள் ஐயப்பன் மலை ஐதீகத்துக்கு எதிரானவர்கள் எனவும் காவல்துறையினர் எனவும் இரு விதமாக கூறப்பட்டன.
பிறகு அவை அனைத்தும் புகைபடக் கதையாக சித்தரிக்கப்பட்டவை என தெரிய வந்தது. அதில் நடித்தவர் ஆர் எஸ் எஸ் தொண்டர் ராஜேஷ் குரூப் என்பவர் ஆவர். அவரை திடீரென கேரள காவல்துறை கைது செய்துள்ளதாக டிவிட்டரில் செய்திகள் பரவி வருகின்றன. பொய்த் தகவல்களை பரப்பிய குற்றத்தில் அவர் கைது செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.