கொரோனா இல்லை என்று ரிசல்ட் வந்த அனைவருக்கும் மறுபரிசோதனை கட்டாயம்: மத்திய சுகாதார அமைச்சகம்

டெல்லி: கொரோனா இல்லை என்று ரிசல்ட் வந்த அனைவருக்கும் மறுபரிசோதனை கட்டாயம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்து உள்ளது.

உலகில் உள்ள 200க்கும் அதிகமான நாடுகளில் கொரோனா மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிக தொற்றுகள் பதிவான 2வது நாடு என்ற நிலையில் இந்தியா பதிவாகி உள்ளது. இந்நிலையில் அறிகுறி இருந்தாலும் கொரோனா நெகட்டிவ் வந்த நபர்களுக்கு மறுபரிசோதனை கட்டாயம் என்று அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது:  ரேபிட் டெஸ்ட் கிட் பரிசோதனையில் கொரோனா இல்லை என்று முடிவு வந்தாலும் சிலருக்கு அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது.

ஆகையால் பாசிட்டிவ் என்ற ரிசல்ட் வந்த நோயாளிகளை தவறவிடவில்லை என்பதை மாநிலங்கள் உறுதிப்படுத்த வேண்டும். நெகட்டிவை வந்தவர்களை தனிமைப்படுத்தி, மருத்துவமனையில் சேர்க்க வலியுறுத்த வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அதிகாரி அல்லது ஒரு குழு நியமித்து கண்டறிய வேண்டும்.  ரேபிட் சோதனை விவரங்களை தீவிரமாக ஆய்வு செய்து, கொரோனா இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.