டில்லி:

கவல் அறியும் உரிமைச் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில்,  மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாத அளவில், முறியடிக்கப்பட  வேண்டும் என காங்கிரஸ் கட்சி எம்.பி.க்களுக்கு சோனியாகாந்தி அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த 2005ம் ஆண்டு மத்திய காங்கிரஸ் அரசால் அறிமுகப்படுத்தபட்ட தகவல் உரிமை அறியும் சட்டம், மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சட்டத்தை மழுங்க செய்யும் வகையில்  சில திருத்தங்கள் செய்து மீண்டும் மக்களவையில் மோடி அரசு தாக்கல் செய்துள்ளது.

இதற்கு எதிர்க்கட்சிகள்  கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மக்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இருப்பதால், எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பையும் மீறி அங்கு சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. தற்போது மாநிலங்களவையில் ஒப்புதலுக்காக அனுப்பப்பட உள்ளது.

இந்த நிலையில்,  தகவல் அறியும் உரிமைச் சட்ட திருத்த மசோதாவை மாநிலங்களவையில் முறியடிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி எம்.பி.க்களுக்கு சோனியாகாந்தி அறிவுறுத்தியுள்ளார்.

இந்த  திருத்த மசோதாவுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நோட்டீஸுக்கு 14 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த நிலையில், எதிர் கட்சிகள் துணையுடன் தகவல் அறியும் உரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்க்க சோனியா அறிவுறுத்தி உள்ளார்.

இதன் காரணமாக தகவல் உரிமை பெறும் சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறுவது கேள்விக்குறியாகி உள்ளது.