டில்லி

னிப்பட்ட தகவல்கள் உள்ளதால், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பிரதமரின் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை விவரங்களை தர விலக்கு அளித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் சோனி எஸ் எரமத் என்பவர் ஒரு கேள்வியை எழுப்பி இருந்தார்.  அவர், “இந்திய ஜனாதிபதி பிரதமருக்கு நரேந்திர மோடி என்னும் பெயரில் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாரா?  அப்படியானால் அவருடைய ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையில் அவர் பெயர் மற்றும் விவரங்கள் எவ்வாறு குறிப்பிடப் பட்டுள்ளது?”  எனக் கேட்டிருந்தார்.

அதற்கு பிரதமரின் அலுவலகத்தில் இருந்து பதில் தரப்பட்டுள்ளது.  அந்த  பதிலில், “இந்திய சட்டத்தின் படி பிரதமருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.   பிரதமரின் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையில் அவருடைய தனிப்பட்ட தகவல்கள் உள்ளன.  தகவல் அறியும் சட்ட விதிகளின் படி ஒருவருடைய தனிப்பட்ட விவரங்களை தர விலக்கு உள்ளது.  அதனால் இந்த விவரங்களை தருவதற்கில்லை” என கூறப்பட்டுள்ளது.

இதே தகவலை தலைமை தகவல் ஆணைய தலைவர் மாத்தூர் உறுதி செய்துள்ளார்.