அதிக கடன் வாங்கியோர் விவரம் அளிக்க தகவல் ஆணையர் உத்தரவு

டில்லி

சிறு விவசாயக் கடனாளிகள் பெயரை வெளியிட்டு  பெரிய அளவில் கடன் வாங்கியோர் விவரங்களை வெளியிடாதது ஏன் என தகவல் அணையர் கேள்வி எழுப்பி உள்ளார்

அனைத்து வங்கிகளும் தங்களிடம் கடன் வாங்கிய விவசாயிகள், மாணவர்கள் உள்ளிடோரின் பட்டியலை வெளியிடுகின்றன.   ஆனால் அதிக அளவில் கடன் வாங்கியோர் பட்டியலை வெளியிடுவதில்லை.   இதற்கு நாடெங்கும் எதிர்ப்பு உள்ளது   இந்நிலையில்  ரிசர்வ் வங்கி, மத்திய நிதி அமைச்சகம் உள்ளிட்ட பல துறைகளுக்கு மத்திய தகவல் உரிமை ஆணையர் ஸ்ரீதர் ஆசார்யுலு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அந்த உத்தரவில், “ரூ. 50 கோடிக்கு மேல் வங்கிக் கடன் வாங்கி விட்டு ஏமாற்றுபவர்களின் பெயர் மற்றும் விவரங்களை மத்திய நிதி அமைச்சகம், மத்திய புள்ளியியல் அமைச்சகம், ரிசர்வ் வங்கி உள்ளிட்டவை வெளிப்படையாக அளிக்க வேண்டும்.    வங்கிகள் விவசாயக் கடன் உள்ளிட சிறிய அளவு கடன் வாங்கியோர் விவரங்களை வெளியிடும் போது ரூ. 50 கோடிக்கு மேல் கடன்  வாங்கியோர் விவரங்களை வெளியிடாதது ஏன்?

இவ்வாறு கடனை திருப்பி தராதவர்களுக்கு செட்டில்மெண்ட் என்னும் பெயரில் வட்டி தள்ளுபடி உள்ளிட்ட பல சலுகைகளை வங்கிகள் அளித்து விட்டு அது குறித்து விவரங்கள் அளிப்பதில்லை.   அதனால் அவர்கள் மீண்டும் தவறு செய்வது எளிதாகி வருகிறது.   அதே நேரத்தில்  தங்கள் பெயர் கடனாளிகள்  பட்டியலில் வந்ததால் அவமானத்தில் பல விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர்.

இதுவரை சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணக்காரர்கள் மற்றும் கார்பொரேட் தொழில் அதிபர்கள் வங்கியில்  கோடிக்கணக்கில் ஏமாற்றி விட்டு ஓடி உள்ளனர்.   ஆனால் விவசாயிகள் நாட்டை விட்டு ஓட மட்டார்கள்.   எனவே இவர்களின் கடன் குறித்து விவரம் அளிப்பது போல பணக்காரர்களின் குறிப்பாக கடன் செலுத்தாத பணக்காரர்களின் கடன் விவரங்களி வெளியிட வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.