Random image

பதஞ்சலி நிறுவன விவரங்களை அளித்த தகவல் அதிகாரி பதவி விலகல்

மும்பை

கவல் அறியும் சட்டத்தின் கீழ் பதஞ்சலி நிறுவனத்துக்கு அரசால் அளிக்கப்பட்ட நில விவரங்களை அளித்த அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டதால் பதவி விலகி உள்ளார்.

பதஞ்சலி நிறுவனத்துக்கு அரசு நிலங்களை வழங்கியது குறித்து ஒரு நாளேடு தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விவரங்களை கேட்டிருந்தது.  அந்த விவரங்களை அளிக்காமல் இருந்த அதிகாரிகளிடம் தகவல் அறியும் ஆணையம் விசாரணை நடத்தியது.   அதை ஒட்டி  அரசுஅதிகாரியான அதுல் தாக்கரே பதஞ்சலி நிறுவனத்துக்கு 75% சலுகை விலையில் அரசு நிலங்கள் அளிக்கப்பட்ட விவரங்களை தெரிவித்தார்.

அதை ஒட்டி தகவல் ஆணைய அதிகாரிபினய் குமார் இந்த நிலம் இத்தனை சலுகை விலையில் அளிக்கப்பட்டதற்கான காரணங்களை கேட்டுள்ளார்.   அத்துடன் விவங்களையும் நாளேட்டுக்கு அளித்துள்ளார்.   இந்த விவரங்களை அடிப்படையாகக் கொண்டு பல செய்திகள் வரத் தொடங்கின.

இந்த செய்திகள் வெளியான கடந்த 2017 ஆம் வருடம் மார்ச் மாதம் 8 ஆம் தேதியில் இருந்து 3 நாட்களுக்குள் தகவல்  அளித்த அதுல் தாக்கரே இடமாற்றம் செய்யபட்டுள்ளார்.   அவர் தனது இடமாற்றத்தை எதிர்த்து பல மனுக்கள் அளித்தார்.   ஆயினும் இடமாற்றம் ரத்து செய்யப்படாததை ஒட்டி அவர் நேற்று பதவி விலகி உள்ளார்.   இந்த பதவி விலகல் அரசு அதிகாரிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.