டில்லி

டந்த மார்ச் 23 வரை வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்களில் 19% பேருக்கு மட்டுமே கொரோனா சோதனை நடந்துள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உள்ள வுகான் நகரில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.   அந்த தொற்று மிக சில தினங்களில் சீனா முழுவதும் பரவியதோடு மற்ற உலக நாடுகளிலும் பரவத் தொடங்கியது.    இதையொட்டி பல நாடுகளில் வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு தீவிர சோதனைகள் நடத்தப்பட்டன.  தற்போது உலக நாடுகளில் சுமார் 46.21 லட்சத்துக்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவுக்கு வெலி நாட்டினருக்கு நடந்த கொரோனா சோதனை குறித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டுக் கிடைத்துள்ள தகவல் பின் வருமாறு :

இந்தியாவைப் பொறுத்தவரை வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு கொரோனா சோதனைகள் நடத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது.  கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் தேதி இந்திய விமான நிலயங்களான மும்பை டில்லி, கொல்கத்தாவில் சீனா மற்றும் ஹாங்காங் கில் இருந்து வரும் பயணிகள் மட்டும் சோதனை செய்யப்பட்டனர்.  அதற்கு நான்கு நாட்களுக்கு பிறகு சென்னை, ஐதராபாத், கொச்சி மற்றும் பெங்களூரு விமான நிலையங்களில் இந்த நாடுகளை சேர்ந்தோருக்கு மட்டும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இந்த கால கட்டத்தில் சீனாவுக்கு வெளியிலும் கொரோனா பாதிப்பு உள்ளது குறித்து உலக சுகாதார மையம் அறிவித்து இருந்தது.  அதன்பிறகு பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருவோரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.   அதன் பிறகு பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் 21 இந்திய விமானநிலையங்களில் ஜப்பான் மற்றும் தென் கொரியப் பயணிகளுக்கும் சோதனை நடந்தன.

இந்த கால கட்டத்தில் கொரோனா பாதிப்பு 45,170 ஐ தாண்டி உள்ளது.  இது அப்போது 24 உலக நாடுகளில் பரவி இருந்தது.   அதன் பிறகு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி முதல் இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருவோரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். ஆனால் மற்ற ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருவோருக்குச் சோதனை நடத்தவில்லை.

அதன் பிறகு மார்ச் மாதம் 4 ஆம் தேதி முதல் இந்தியா வரும் அனைத்து சர்வதேச பயணிகளும் சோதனை செய்யப்பட்டுள்ளனர்.  அப்போதே இந்தியாவில் 44 பேருக்கு கொறோனா உறுதியாகி இருந்தது.   உலகின் 76 நாட்களில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கடந்த ஜனவரி 15 முதல் மார்ச் 23 வரை மொத்த வெளிநாட்டுப்  பயணிகளில் 19% தவிர மற்ற அனைவரும் சோதனை செய்யப்படவில்லை.