நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தபின் அறிவித்த திட்டங்களில் முக்கியமானது “கங்கையை சுத்தப்படுத்தும் திட்டம்.  லக்னோவைச் சேர்ந்த ஐஸ்வர்யா ஷர்மா எனும் பத்தாம் வகுப்பு மாணவிக்கு இந்தத் திட்டத்தின் செயல்பாடுகுறித்து தெரிந்துக் கொள்ள ஆர்வம் ஏற்பட்டது.
இதற்காக அவர் தேர்ந்தெடுத்தது காங்கிரஸ் ஆட்சி கொண்டு வந்த திட்டமான ” தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்.டி.ஐ).
அரசிடம் இருந்த நல்ல பதிலை எதிர்பார்த்து காத்திருந்த ஐஸ்வரியாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது.
நமானி-கங்காஎனும் திட்டம் வெறும் கோப்புகள் அளவிலேயே உள்ளது.
இந்தத் திட்டத்திற்கென ஒதுக்கப்பட்ட 3703 கோடி ரூபாயில் 2958 கோடி ரூபாயை செலவளித்த பின்னரும் புனித நதியாய் கருதப்படும் கங்கையில் எள்ளளவு சுத்தமும் ஏற்படவில்லை.
மொடி 2
கங்கையில் எந்தப்பணியும் மேற்கொள்ளப்படவில்லையெனத் தெரியவந்துள்ளது.
இந்த நமானி-கங்கை” திட்டத்திற்காக, எத்தனை கூட்டங்களைப் பிரதமர் கூட்டி இருந்தார்? இந்தத் திட்டத்திற்காக எந்த எந்த வழிகளில் பணம் செலவழிக்கப்பட்டது ?
போன்ற பல முக்கிய கேள்விகளை ஐஸ்வரியா ஷர்மா ஆர்.டி. ஐ. மனுவில் எழுப்பி இருந்தார்.
கடந்த 2014-2015 ம்ஆண்டு பட்ஜெட்டான 2137 கோடி ரூபாயில் வெறும் 326 கோடி மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015-2016 ஆண்டில் பஜெட்டான 2750 கோடியில் வெறும் 1650 கோடியை மட்டுமே செலவழித்துள்ளது.
மொடி 3
ஆக மொத்தன் 1976 கோடி எப்படி செலவழிக்கப் பட்டது எனும் தகவல் அரசிடம் இல்லை.
அதே போன்று 2016-2017 ஆண்டிற்கான பட்ஜெட்டான 2500 கோடியை எவ்வாறு செலவழிக்கப் படும் எனும் தகவல் அரசிடம் இல்லை.
மோடி அரசு 20,000 கோடி ரூபாயை அடுத்த ஐந்து ஆண்டுகளில் கங்கை சுத்தம் செய்ய ஒதுக்க உறுதிமொழி அளித்துள்ளது.

மொடி 1
கங்கை சுத்தப்படுத்தும் பணிக்கும் இவ்வளவு கோடி செலவு செய்ததை சமூகவலைத் தளங்களில் விமர்சிக்கும் பதிவுகள் வரத்துவங்கியுள்ளன.

கங்கை சுத்தமாகுமா? மக்களின் வரிப்பணம் கங்கையின் பெயரில் கரையுமா எனக் காலம் தான் பதில் சொல்லும்.
 
நன்றி: எகனாமிக்ஸ் டைம்ஸ், லாஜிகல் இந்தியன்