]ருத்ரன்’ படத்தைத் தயாரிப்பது மட்டுமன்றி, இயக்கவும் உள்ளார் பைவ் ஸ்டார் கதிரேசன்.

இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரியவுள்ளார். இயக்குநர் யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமிருந்தன.

தற்போது தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசனே இயக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

இத்திரைப்படத்தில் ப்ரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்கிறார். நாசர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இத்திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்கியது. பி.வாசு இயக்கத்தில் சன் டிவி தயாரிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தில் ஒப்பந்தமான ராகவா லாரன்ஸ், ‘ருத்ரன்’ படத்திலும் நடித்து வருகிறார்.