கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை! ரஜினி

சென்னை:

செய்தியாளர்களை சந்தித்து வரும் நடிகர் ரஜினிகாந்த், தனது கட்சியில், கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு வேறு தலைமை , இதுதான் தனத கொள்கை என்று தெரிவித்தார்.

முதல்வர் பதவியை நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்தது கிடையாது என்றும் தெரிவித்தார்.

60 முதல் 65 சதவீதம் ஐம்பது வயதிற்கு உட்பட்டவர்களுக்கே போட்டியிட வாய்ப்பு தரப்படும் என்று கூறியவர்,  புதியவர்கள் சட்டமன்றத்திற்குள் செல்ல நான் பாலமாக இருப்பேன் 30 முதல் 35 சதவீதம் பல்வேறு துறை நிபுணர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் கூறினார்.