விலங்குகளுக்கு பதிலாக மனிதர்களை கொல்லும் ஆட்சியாளர்கள்….சிவசேனா

மும்பை:

சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. அதில், ‘‘ ஆட்சியாளர்கள் இறைச்சி கடைக்காரர்கள் போல் செயல்படுகின்றனர். ஆனால் அவர்கள் விலங்குகளை கொல்வதில்லை. மாறாக மனிதர்களை கொன்று வருகின்றனர்.

தேர்தலில் வெற்றி பெறுவதும், ஆட்சியில் நீடிப்பதும் ஜனநாயகம் அல்ல. பெரும்பான்மை என்பது எப்போதும் நிரந்தரமல்ல. நாட்டு மக்களே முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். நம்பிக்கையில்லா தீர்மானத்தால் மோடி அரசை பதவியில் இருந்து கீழே இறக்க முடியாது.

பணம், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியும், மின்னணு எந்திரங்களில் மோசடி செய்து வெற்றி பெறுவது வெற்றியே அல்ல’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.