ஆளுங்கட்சியால் மிரட்டப்பட்ட மடாதிபதி…  பலகோடி ரூபாய் சொத்துக்கள் அபேஸ்!

நியூஸ்பாண்ட்:

ண்டவனைவிட ஆள்கிறவர்களை  அதிகம் துதிபாடுபவர்,  அந்த ஆன்மிக புள்ளிராஜா. பாலியல் உட்பட பல புகார்கள் இவர் மீது  உண்டு.  பாண்டி நாட்டு தலைநதகரில் கோலோச்சினாலும்   தமிழகம் முழுதுமே அவரது மடத்துக்கு சொத்துக்கள் இருக்கின்றன.

அம்மாவை நலம் விசாரிக்க யார் யாரோ வர… எப்போதும் புகழ்பாடும் இவர் ஏன் வரவில்லை என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.

இப்போது விசயம் வெளிப்பட ஆரம்பித்திருக்கிறது.

அந்த ஆன்மீக பிரமுகரிடம் இருந்து பல கோடி ரூபாய் சொத்துக்களை சில லட்சகங்களுக்கு கை மாற்றிவிட்டார்களாம் தெக்கத்திய  ஆளும் தரப்பினர்.

“நான் அம்மாவிடம் சொல்வேன்” என்று இவர் மிரட்ட… “அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் சாமி, இப்ப கையெழுத்து போடு” என்று “அகிம்சை” முறையில் கையெழுத்துக்களை வாங்கிவிட்டார்களாம்.

இதனால் அப்செட் ஆனதால்தான், அம்மாவை நலம் விசாரிக்க வரவில்லையாம் ஆன்மிகபுள்ளி.

கார்ட்டூன் கேலரி