சிங்கப்பூர்

சிங்கப்பூரில் நடந்த தேர்தலில் ஆளும் கட்சியான மக்கள் செயல் கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 1959 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் மக்கள் செயல் கட்சி தொடர்ந்து தேர்தலில் வென்று ஆட்சி செய்து வருகிறது.  தற்போது பிரதமர் லீ செய்ன் லூங் தலமிஅயில் இக்கட்சி ஆட்சி புரிந்து வருகிறது.   இந்த ஆட்சிக்காலம் முடிய இன்னும் 10 மாதங்கள் உள்ளன.   இந்நிலையில் சிங்கப்பூர் பிரதமர் லீ முன்கூட்டியே தேர்தலை அறிவித்தார்.  அதையொட்டி நேற்று வாக்குப்பதிவு நடந்தது.

கொரோனா தாக்கம் காரணமாக வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை மற்றும் வாக்குப்பதிவு நேரம் அதிகரிக்கப்பட்டது   மக்கள் முகக்கவசம் மற்றும் கையுறைகள் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றி வாக்குப்பதிவு செய்தனர்.    வாக்குப்பதிவு முடிந்த பிறகு நேற்றே வாக்கும் எண்ணும் பணி தொடங்கி உடனுக்குடன் முடிவு அறிவிக்கப்பட்டது.

ஆளும் கட்சியான மக்கள் செயல் கட்சி மொத்தம் உள்ள 93 இடங்களில் 83 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.   எதிர்க்க்ட்சியான் தொழிலாளர் கட்சி மீதமுள்ள 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.   சென்ற 2015 ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் செயல் கட்சி 69.9% வாக்குகள் பெற்றிருந்தது.   ஆனால் இம்முறை 61% வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது.