ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும்… உயர்நீதிமன்ற நீதிபதி

--

மதுரை:

ன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை  நீதிபதி கருத்து தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் சீட்டு  விளையாட்டு, லாட்டரி உள்பட சூதாட்டங்கள் நடைபெற ஏற்கனவே தடை உள்ளது. இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டமான ரம்மி சீட்டு விளையாட அழைப்பு விடுக்கும் வகையில், தொலைக்காட்சி, வலைதளங்கல் வாயிலாக கவர்ச்சிகரமான விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விளம்பரத்தை நம்பி பலர் பலம் கட்டி ஏமாந்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  ஆன்லைன் ரம்மி சீட்டு விளையாட்டுக்கு எதிராக நெல்லையைச் சேர்ந்த சிலுவை என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, லாட்டரி சீட்டு முறைக்கு தடை விதித்ததை போல் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிக்க வேண்டும்.

இதுபோன்ற விளையாட்டுகள்  வேலையில்லா இளைஞர்களை குறிவைத்து ஆன்லைன் விளையாட்டு மோசடி நடப்பதாகவும், இதுபோன்ற் விளையாட்டுக்களை  தடை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் தெலுங்கானாவில் ஆன்லைன் சீட்டு விளையாட்டுக்கு அரசு தடை விதித்து உள்ளதாக நீதிபதி தகவல் தெரிவித்துள்ளார்.