சாத்தூர்:  ஓடும் பேருந்தில் துப்பாக்கியால் சுட்டு ஒருவர் கொலை!

 

murder_liveday_qao3p6

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் ஓடும் பேருந்தில் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

img-20161012-wa0002

சாத்தூர் அருகே இன்று அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது பேருந்து பயணிகள் இருவரிடையே ஏதோ தகராறு ஏற்பட்டது. அப்போது ஒருவர் மற்றவரை துப்பாக்கியால் சுட்டார். இதில் சுடப்பட்ட நபர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். சுட்டவரும் அவருடன் பயணித்த இன்னொருவரும் தப்பியோடிவிட்டனர்.

img-20161012-wa0001-copy

விசாரணையில், சுடப்பட்ட நபர், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பசாமி என்பது தெரியவந்தது. பேருந்தில் ஏற்பட்ட திடீர் தகராறா அல்லது முன்பகையா என்பது தெரியவில்லை. பட்டப்பகலில் ஓடும் பேருந்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டது அப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கார்ட்டூன் கேலரி