தர்மபுரி: ஓடும் ரயிலை நிறுத்தி கொள்ளை!

தர்மபுரி:

ர்மபுரி அருகே ஒடும் ரெயிலை நிறுத்தி கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையில் ஈடுபட்ட வர்கள் இந்தியில் பேசியதால், அவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

திருவனந்தபுரம் – டில்லி இடையே இயக்கப்படும் கேரள விரைவு ரயில், இன்று மொரப்பூர் அருகே வந்தபோது திடீரென நிறுத்தப்பட்டது. விசாரித்தபோது சிக்னல் இல்லை என ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டது.

ஆனால், கொள்ளையர்கள் சிக்னல்  கேபிள் இணைப்பை துண்டித்ததால், ரெயில் ஆர்.எஸ்.தொட் டம்பட்டி அருகே  நிறுத்தப்பட்டது. அதை பயன்படுத்திக்கொண்ட கொள்ளையர்கள் நான்கு பேர் ரயிலுக்குள் புகுந்தனர்.

அவர்கள்  ரயிலில் பயணித்த பெண்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, நகை உள்ளிட்ட பொருட் களை கொள்ளையடித்துவிட்டு தப்பித்தனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் 20 சரவன்  இருக்கலாம் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.