தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் – ரூபா குருநாத் தலைவராகும் வாய்ப்புகள் பிரகாசம்!

சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாக கமிட்டி கூட்டம் நிறைவடைந்த நிலையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் பெண் தலைவராக தேர்வுசெய்யப்படவுள்ளார் ரூபா குருநாத்.

இவர் இந்தியா சிமெண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர் மற்றும் முன்னாள் பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசனின் மகள் மற்றும் பிசிசிஐ அமைப்பால் வாழ்நாள் தடைவிதிக்கப்பட்ட குருநாத் மெய்யப்பனின் மனைவி ஆவார். ஏவிஎம் சினிமா குடும்பத்தின் மருமகள்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமசாமி கிரிக்கெட் சங்க செயலாளராக தேர்வு செய்யப்படும் வாய்ப்புகள் அதிகம் என்று தகவல்கள் கூறுகின்றன. சேலம் மாவட்டத்திலிருந்து இந்தப் பதவிக்கு வர வாய்ப்புகள் முதல் நபர் இவர்தான்.

இதற்கு முன்னதாக, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாக பதவி வகித்தோர் அனைவருமே சென்னைவாசிகளே.

கேஎஸ் சங்கர் இணைச் செயலராக தேர்வுசெய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

கிரிக்கெட் சங்க தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தலை நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதியளித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.