Random image

டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி….72 என்ற நிலையை எட்டியது

டில்லி:

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 72 ஆக வீழ்ச்சியடைந்தது.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 6 வேலை நாட்களாக குறைந்த வண்ணம் இருந்தது. இந்த வகையில் இன்றைய வர்த்தக நேரத்தில் மதியம் இதன் மதிப்பு 72 என்ற நிலையை அடைந்தது. இது வரலாறு காணாத வீழ்ச்சியாகும்.

இந்த வீழ்ச்சியால் முதலீட்டாளர்கள் வலை அடைந்தள்ளனர். ஃபோரெக்ஸ் சந்தையில் இன்று காலை 71.67 என்ற நிலையில் ஆரம்பமானது. இறுதியில் 71.75 என்ற நிலையுடன் முடிவடைந்தது. இடையில் 72 என்ற வரலாற்று வீழ்ச்சியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.