இன்று ரூ.74.48: தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் இந்திய ரூபாய் மதிப்பு

மும்பை:

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்து வருகிறது. இது முதலீட்டாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு நேற்றை விட 27 பைசா குறைந்து  இன்று மேலும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதாகவும்,  இந்தியா, சீனா உள்பட மற்ற நாடுகளுடன் அமெரிக்காவின் வர்த்தக நடைமுறை காரணமாக சர்வதேச சந்தையில் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. கச்சா எண்ணெய் விலையை அந்நாட்டு அரசு உயர்த்தி உள்ளது. மேலும் இறக்குமதியாளர்கள் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஆகியவை டாலரை அதிகம் வாங்கி குவித்து வருவதாலும் ரூபாயின் மதிப்பில் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்றும் கடுமையாக சரிந்து  74.48 ஆக உள்ளது. நேற்று வர்த்தகம் முடிவில் 74.21 பைசாவாக இருந்த நிலையில்,  இனறு மேலும் சரிவடைந்து உள்ளது.