இன்று ரூ. 73.34: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையான வீழ்ச்சி

டில்லி:

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று கடுமையான வீழ்ச்சியை எதிர்கொண்டு உள்ளது. இந்திய வரலாற்றில் இதுவரை காணாத அளவுக்கு தொடர்ந்து வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இதன் காரணமாக இந்தியாவில் பொருளாதார பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகி வருவதாக வணிகவியலாளர்கள் எச்சரிக்கை செய்து வருகின்றனர்.

இன்று  டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 73.34 எனும் நிலையை எட்டி உள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதாகவும்,  இந்தியா, சீனா உள்பட மற்ற நாடுகளுடன் அமெரிக்காவின் வர்த்தக நடைமுறை காரணமாக சர்வதேச சந்தையில் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்கா ஈரான் மீது விதித்துள்ள  வர்த்தக தடை விதித்துள்ள நிலையில்,  ஈரானின் கச்சா எண்ணெய் உற்பத்தியை முடக்க அமெரிக்க முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்தியா உள்பட நட்பு நாடுகளிடம்,  ஈரானிடம் இருந்து கச்சா எண்ணை வாங்கக்கூடாது என்றும் அமெரிக்கா வற்புறுத்தி வருகிறது. வரும் 4ந்தேதிக்கு பிறகு இதை மீறினால் பொருளாதார தடைகளை சந்திக்க நேரிடும் என்றும் இந்தியா மற்றும் சீனாவை அமெரிக்கா மிரட்டி உள்ளது.

இந்த நிலையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று கடுமையாக சரிந்துள்ளது. கடந்த வாரம்  டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 72.91 ஆக இருந்தது. அதன்பின்னர் இன்று வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 43 காசுகள் சரிந்து 73.34 எனும் நிலையை எட்டி உள்ளது.