இந்த ஆண்டு ரூபாய் மதிப்பு மேலும் வரலாறு காணாத வீழ்ச்சி அடையும்: கருத்து கணிப்பில் தகவல்

பெங்களூரு:

இந்த ஆண்டு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடையும் என தகவல் வெளியாகியுள்ளது. .

சர்வதேச பத்திர வருவாய் உயர்வு மற்றும் கடந்த 2 மாதங்களாக நம் நாட்டில் நிலவிய பண மதிப்பிறக்க அறிவிப்பு போன்றவற்றால் இந்த வீழ்ச்சி ஏற்படும் என்று ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

i

ஆசியாவிலேயே வேகமாக வளர்ந்து வரும் வகையில் ரூபாயின் மதிப்பு கடந்த ஆண்டு 2 சதவீதம் மட்டுமே இந்திய பொருளாதாரத்தில பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. கடந்த கால வரலாற்றை பார்க்கும் போது இது முன்னேற்றமாக தெரிந்தது.

ஆனால், அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் பெற்றி பெற்றது, மோடியின் உயர்மதிப்பு ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பால் 2016ம் ஆண்டு இறுதியில் நம் நாட்டில் உள்ள தொழில் மூலதன முதலீடு வெளியேற்றம் தீவிரமாகியது.

இதனால் கடந்த வியாழக்கிழமை டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 67.73 என்ற நிலையில் முடிந்தது. இது ஒரு மாதத்தில் ரூ.68.50ஆக அதிகரிக்கும். அந்நிய செலாவணி மேற்கொள்ளும் 30 நிதி அமைப்புகளிடம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் இந்த வீழ்ச்சி தெரியவந்துள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் 69.50 ரூபாயாக இது வீழ்ச்சியை சந்திக்கும். இந்த 12 மாத தாக்கம் பல ஆண்டுகளுக்கு நீடித்து வரலாற்று வீழ்ச்சியை ஏற்படுத்தும். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வரை 67.73 ஆக இருந்தது.

டிரம்ப் வெற்றி மூலம் வரி விதிப்பு குறையும், உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் மறுசீரமைப்புகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த டிசம்பர் 15ம் தேதி அமெரிக்க கருவூலம் வர்த்தகம் 25 சதவீதம் அணிதிரண்டது. கடந்த இரண்ட ஆண்டு உயர்வை மிஞ்சி 2.641 சதவீதம வளர்ச்சி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

You may have missed