ரிசர்வ் வங்கி ஆளுநர் ராஜினாமா : ரூபாய் மதிப்பு சரிவு

டில்லி

நேற்று ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமாவை ஒட்டி டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது.

மத்திய அரசுடன் ஏற்பட்ட பனிப்போர் காரணமாக ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் நேற்று ராஜினாமா செய்தார். சொந்த பணியின் காரணமாக அவர் பதவி விலகுவதாக தனது ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார். அவருடைய ராஜினாமா இந்தியப் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியது போலவே ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலின் ராஜினாமா பங்குச் சந்தையில் தாக்கம் ஏற்படுத்தி உள்ளது. இன்று காலையில் இருந்தே பங்குச் சந்தை இறங்கு முகமாக உள்ளது. அதே போல டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் சரியத் தொடங்கி உள்ளது.

நேற்று மாலை முடியும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.71.34 ஆக இருந்தது. இன்று காலை ஆரம்பத்தில் அது ரூ.72.20 ஆக சரிந்தது. அது அதன் பிறாகு மேலும் சரிந்து தற்போது ரூ. 72.42 ஆக சரிந்துள்ளது.