சென்னை: நடைபெறவுள்ள ஊரக அளவிலான உள்ளாட்சித் தேர்தலில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடும் மாவட்டங்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் சர்ச்சைக்குரிய முறையில், ஆளுங்கட்சிக்கு சாதகமாக நடத்தப்படுவதாக பலதரப்பு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், இந்த ஊரக அளவிலான உள்ளாட்சித் தேர்தலில் திமுக எந்தெந்த மாவட்டங்களில் போட்டியிடவுள்ளது என்பது குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

கிருஷ்ணகிரி கிழக்கு, விருதுநகர் வடக்கு, திருவண்ணாமலை வடக்கு & தெற்கு, திருச்சி வடக்கு & தெற்கு, சேலம் கிழக்கு, ஈரோடு தெற்கு, மதுரை மாநகர் மாவட்டம், கரூர், சேலம் மத்திய & கிழக்கு & மேற்கு மாவட்டங்கள், திருப்பூர் வடக்கு & தெற்கு மாவட்டங்கள்.

மேலும், கோவை வடக்கு & தெற்கு மாவட்டங்கள், நீலகிரி, கடலூர் கிழக்கு & மேற்கு மாவட்டங்கள், மதுரை தெற்கு & வடக்கு மாவட்டங்கள், ஈரோடு தெற்கு, தருமபுரி, திண்டுக்கல் கிழக்கு & மேற்கு மாவட்டங்கள்.

மேலும், தஞ்சை வடக்கு & தெற்கு மாவட்டங்கள், நாகை வடக்கு, கன்னியாகுமரி கிழக்கு, புதுக்கோட்டை தெற்கு & வடக்கு மாவட்டங்கள், திருவள்ளூர் வடக்கு, பெரம்பலூர் போன்ற மாவட்டங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

மேலும், எஞ்சியுள்ள மாவட்டங்களில் திமுக போட்டியிடுவது குறித்து கட்சிகளிடையே பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும், விரைவில், அந்தந்த மாவட்ட திமுக சார்பாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.