ஊரக உள்ளாட்சி தேர்தல்: 27ல் 14 மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் பதவிகளை கைப்பற்றுகிறது திமுக!

சென்னை:

மிழகத்தில் நடைபெற்று முடிந்துள்ள ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது.

தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களில் 14 மாவட்டங்களை திமுக தன்வசப்படுத்தி உள்ளது. இங்கு அதிக அளவிலான  கவுன்சில்களை திமுக கூட்டணி கைப்பற்றியது. இதன் காரணமாக  மறைமுகத் தேர்தலின்போது, அந்த மாவட்டங்களின் பஞ்சாயத்து தலைவர் பதவிகள் திமுகவுக்கு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை, திருவள்ளூர், நீலகிரி, திண்டுக்கல், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, நாகை, தஞ்சை, திருவாரூர் , புதுக்கோட்டை, திருவண்ணாமலை,  ராமநாதபுரம், திருச்சி, சிவகங்கை  ஆகிய 14 மாவட்டங்கள் திமுக வசம் வந்துள்ளன.

தேர்தல் நடைபெற்ற 27 மாவட்ட கவுன்சில்களில் திமுக 14ல் வெற்றி பெற்றுள்ளது, அதிமுக 12ல் வெற்றி பெற்றுள்ளது. ஒரு மாவட்டத்தில் இரு கட்சிகளும் சமநிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

1) மதுரையில் மொத்தம் உள்ள 23 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் திமுக கூட்டணி 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியை திமுக கைப்பற்றுகிறது.

2) திருவள்ளுர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 24 மாவட்ட கவுன்சிலர்களில், 19 இடங்களை திமுக கைப்பற்றி உள்ளது. இதன் காரணமாக மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியை திமுக கைப்பற்றுவது உறுதியாகி உள்ளது.

3) நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 5 இடங்களில் திமுக வென்றுள்ளது. இதனால் இங்கும் திமுக கொடி பறக்கிறது

4)  கிருஷ்ணகிரியில் 23 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 14 இடங்களை வென்றுள்ளது. இதனால் கிருஷ்ணகிரியும் திமுகவசம் வருவது உறுதியாகி விட்டது. 

5) நாகப்பட்டிணம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 21 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 13 இடங்களை வென்றுள்ளது. இதனால் நாகையும் திமுகவுக்கே.

6) 23 மாவட்ட கவுன்சிலர் இடங்களைக் கொண்ட திண்டுக்கல்லில் 16 இடங்களை திமுக கைப்பற்றி உள்ளதால், அந்த மாவட்டமும் திமுக வசமாகி உள்ளது.

7) பெரம்பலூர் மாவட்டத்தில், மொத்தமுள்ள 8 இடங்களில்  7 இடங்களை திமுக கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அந்த மாவட்டமும் திமுகவிற்கு கிடைத்துள்ளது.

8) 24 மாவட்ட கவுன்சிலர் இடங்களைக் கொண்ட திருச்சியில்  19 இடங்களை திமுக வென்று, திருச்சி திமுக கோட்டை என்பதை மீண்டும் நிரூபித்து உள்ளது.

9) சிவகங்கையில் 16 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கான இடங்களில் 9 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றி உள்ளதால், அங்கும் திமுக கொடி பறக்கிறது.

10) 15 இடங்களைக்கொண்ட திருவாரூரில், 14 மாவட்ட கவுன்சிலர் இடங்களிளை திமுக கைப்பற்றியது, திருவாருர் திமுகவின் கோட்டையாக்கும் என்பதை நிரூபித்து உள்ளது.

11) புதுக்கோட்டையில் மொத்தமுள்ள 22 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 13 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

12)  34 மாவட்ட கவுன்சிலர்  பதவிகள் உள்ள திருவண்ணாமலையில் திமுக 25 இடங்களை வென்று  சாதனை படைத்துள்ளது. இதனால், இங்கும் திமுக கொடியே பறக்றிது.

13) ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 17 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 12 இடங்களை திமுக கைப்பற்றி உள்ளது.

14) மொத்தமுள்ள 28 கவுன்சிலர்  பதவிகளில்,  திமுக கூட்டணி 23 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

மேலே 14 மாவட்டங்களில் மறைமுகமாக நடைபெற உள்ள பஞ்சாயத்து தலைவருக்கான தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிபெறுவது உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக தமிழக மக்கள் திமுகவுக்கு ஆதரவாக இருப்பது மீண்டும் உறுதியாகி உள்ளது.