புதுக்கோட்டையில் சோகம்: வாக்குப்பதிவு நாளன்று மரணத்தை தழுவிய பெண் வேட்பாளர்!

--

புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில்  அருகே வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட பெண் வேட்பாளர் வாக்குப்பதிவு நாளான இன்று மரணத்தை தழுவி உள்ளார். இது பெரும் சோகத்தை  ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தின் ஊரகப்பகுதிகளுக்கு இன்று 2வது கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம்  நெடுவாசல் மேற்கு கிராம ஊராட்சியின் 5-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு, அந்த பகுதியைச் சேர்ந்த மோ.மல்லிகா (வயது 42)  என்ற பெண் போட்டியிட்டார்.

இன்று அந்த பகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில்,இன்று அதிகாலை சுமார் 5.30 மணி அளவில் மல்லிகா மாரடைப்பால்திடீர் மரணம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.