ரஷ்யா அறிவித்த உலகின் முதல் கோவிட் -19 தடுப்பு மருந்து: அதிபர் புடினின் மகளுக்கு கொடுக்கப்பட்டது

‘கொரோனா வைரஸுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பு மருந்து இன்று பதிவு செய்யப்பட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்தார். சோவியத் ரஷ்யாவின் முதல் செயற்கைக்கோளான ‘ஸ்பூட்னிக்” நினைவாக இந்த மருந்திற்கு “ஸ்பூட்னிக் V” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்து தயாரிப்பில் ஒரு பெரும் போட்டி நடந்து வந்தாலும் தனது தடுப்பு மருந்தை இன்று பதிவு செய்ததின்  மூலம், இப்போட்டியில் ரஷ்யா வென்றுள்ளது. இந்த தகவலை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று காலை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இம்மருந்தின் பாதுகாக்கும் தன்மை மற்றும் செயல்திறனைச் சோதிப்பதற்கான மருத்துவ பரிசோதனைகளின் இறுதி கட்டம் இன்னும் செயலில் இருந்தாலும், பொது பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான  அரசு நடைமுறைகளும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. தனித்துவ கொரோனா வைரஸ் தொற்றுநோய் 20 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதித்து உலகளவில் கிட்டத்தட்ட 750,000 பேரைக் பலிக் கொண்டுள்ளது, இதனால் உலக அளவில் பொருளாதாரங்கள் முடங்கிப்போயுள்ளன.

இந்த மருந்திற்கு தனது முதல் செயற்கைக்கோளான “ஸ்புட்னிக்”கின் பெயரையே ரஷ்யா தேர்வு செய்துள்ளது. தடுப்பு மருந்து திட்டத்திற்கு நிதியளிக்கும் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைவர் கிரில் டிமிட்ரிவ், மூன்றாம் கட்ட சோதனைகள் புதன்கிழமை தொடங்கும் என்றும், தொழில்முறை உற்பத்தி செப்டம்பர் முதல் எதிர்பார்க்கப்படுகிறது என்றும், 20 நாடுகள் ஒரு பில்லியனுக்கும் அதிகமான அளவுகளை முன்கூட்டியே ஆர்டர் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், கோவிட் -19 தடுப்பு மருந்து குறித்து தனக்கு தொடர்ந்து தகவல் தெரிவிக்குமாறு ஜனாதிபதி சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோவிடம் அறிவுறுத்தியுள்ளார். அதே நேரத்தில் “இது மிகவும் திறம்பட செயல்படுகிறது” என்றும் “நிலையான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது” என்றும் தனக்குத் தெரியும் என்று அறிவித்துள்ளார். “இன்று காலை, உலகில் முதல், புதிய கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பு மருந்து அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டது” என்று புடின், செய்தியாளர்களிடம் பகிர்ந்துக் கொண்டார்.

மேலும் பேசிய அதிபர் புடின், தடுப்பு மருந்து உருவாக்கத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு, இது “உலகிற்கு மிக முக்கியமான நேரம் மற்றும் முக்கியமான உதவி” என்று விவரித்தார். நாட்டின் ஆராய்ச்சி அமைப்பு விரைவில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் உற்பத்தியைத் தொடங்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். “இது மிகவும் திறம்பட செயல்படுகிறது, வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது என்பதை நான் அறிவேன்,” என்று புடின் கூறினார்.

மேலும் ஒரு முக்கிய செய்தியாக, அவரது இரண்டு மகள்களில் ஒருவர் தடுப்பு மருந்தைப் போட்டுக் கொண்டதாக அறிவித்தார். தடுப்பு மருந்து கொடுக்கப்பட்ட பின், சிறிது காய்ச்சல் ஏற்பட்டதாகவும், மகளுக்கு 38 டிகிரி செல்சியஸ் (100.4 பாரன்ஹீட்) வெப்பநிலை இருந்தது என்று புடின் கூறினார், பின்னர் அது மறுநாள் 37 டிகிரிக்கு (98.6 பாரன்ஹீட்) குறைந்தது. இரண்டாவது ஊசிக்கு பிறகு அவள் மீண்டும் வெப்பநிலையில் சிறிது அதிகரிப்பு உண்டானாலும், ஆனால் அது சரியாகி விட்டது. அவர் நன்றாக இருக்கிறார் மற்றும் அதிக அளவிலான ஆன்டிபாடிகள் உருவாகி உள்ளன,” என்று புடின் மேலும் கூறினார்.

இருப்பினும், இபோதைக்கு தடுப்பு மருந்தின் தடுப்பூசியின் பதிவு நிபந்தனைக்குட்பட்டது என்றும், மற்றும் உற்பத்தி நடந்து கொண்டிருக்கும் போதே, மருத்துவ சோதனைகள் தொடரும் என்றும், முராஷ்கோ கூறினார். தற்போது, WHO மற்றும் ரஷ்ய சுகாதார அதிகாரிகள் புதிதாக அங்கீகரிக்கப்பட்ட COVID-19 தடுப்பு மருந்துக்கு WHO இன் செய்தித் தொடர்பாளர் இன்று வருத்தம் தெரிவித்தார்.

Thank you: Livemint

கார்ட்டூன் கேலரி