நண்பேன்டா….! ஜம்முகாஷ்மீர் நடவடிக்கைக்கு ஆதரவு கரம் நீட்டிய ரஷ்யா!

மாஸ்கோ:

ம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கை, இந்தியா அரசியல் சட்டத்திற்கு உட்பட்டே மேற்கொண்டுள்ளது என்று ரஷ்யா தெரிவித்து உள்ளது.

ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் உலக நாடுகளை துணைக்கு அழைத்து வரும் நிலையில், ஐ.நா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்பட பல நாடுகள்  பாகிஸ்தானை கண்டித்த நிலையில், இந்தியாவின் நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்து உள்ளன.

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் அரசியலமைப்பு சட்டப்படியே இந்தியா செயல்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த முடிவுகளுக்கு ரஷ்யா ஆதரவு கரம் நீட்டி உள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரஷ்ய வெளியுறவுத்துறை, ‘இந்தியா தனது அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டே ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை கையாண்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மோசமடைய இந்தியாவும், பாகிஸ்தானும் அனுமதிக்கக் கூடாது. இந்தியாவும், பாகிஸ்தான் ஒற்றுமையுடன் இருந்தால் ரஷ்யா எப்போதும் ஆதரவு தெரிவிக்கும்’

இவ்வாறு தெரிவித்து உள்ளது.