Random image

சீனாவும் ரஷ்யாவும் ஐரோப்பாவும் என் எதிரிகள்  :  டிரம்ப்

வாஷிங்டன்

ஷ்ய அதிபரை சந்திக்கச் செல்லும் டிரம்ப் சீனாவும் ரஷ்யாவும் ஐரோப்பாவும் அமெரிக்காவின் எதிரிகள் என குறிப்பிட்டுள்ளார்

ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் முறித்துக்  கொண்டார்.    அதன் பிறகு ஈரானுக்கு பொருளாதாரத் தடை விதித்தார்.   அதன் பிறகு ஐரோப்பிய நாடுகள் ஈரானுடன் வர்த்தக உறவை முறித்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.   ஆனால் ஐரோப்பிய நாடுகள் ஈரானுடனான வர்த்தக உறவுகளை முறித்துக் கொள்ளவில்லை.

இந்நிலையில் ரஷ்ய அதிபர் புடினுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு ஒன்றை மேற்கொள்ள உள்ளார்.    அவர் நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார்.   அப்போது டிரம்ப், “நமக்கு ஏராளமான எதிரிகள் உள்ளனர்.   நமக்கு எதிராக வர்த்தக உறவுகள் வைத்திருப்பதால் ஐரோப்பிய நாடுகளும் நமக்கு எதிரிகள் தான்.    அவர்கள் மட்டுமின்றி ரஷ்யர்களும் ஒரு விதத்தில் நமக்கு எதிரிகளே.

பொருளாதாரத்தில் சீனாவும் நமக்கு எதிரிகள் ஆவார்கள்.    அதே நேரத்தில் அவர்கள் கெட்டவர்கள் அல்ல.   நல்ல போட்டியாளர்கள் மட்டுமே.   ஜெர்மனி நாடு எரிவாயுவுக்கு முழுக்க முழுக்க ரஷ்யாவை நம்பி உள்ளது.  இது ஜெர்மனிக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.   ரஷ்யா இதன் மூலம் ஜெர்மனியிடம் இருந்து கோடிக்கணக்கில் பொருள் ஈட்டுகிறது” என தெரிவித்துள்ளார்.