மாஸ்கோ

செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடப்படும் எனவும் 60 அமெரிக்க அதிகாரிகள் வெளியேற்றப்படுவார்கள் எனவும் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் முன்னாள் ரஷ்ய உளவாளி விஷம் கொடுக்கப்பட்டது குறித்து சர்ச்சை எழுந்தது தெரிந்ததே.   அதை ஒட்டி அமெரிக்கா உட்பட பல நாடுகள் ரஷ்யாவுடனான தூதரக உறவை முறித்துக் கொள்ள முடிவு செய்துள்ளன.    அதை ஒட்டி இந்த நாடுகளில் இதுவரை 150 ரஷ்ய அதிகாரிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.   அவர்களில் 60 அதிகாரிகள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அதற்கு பதிலடி கொடுக்க ரஷ்யா முனைந்துள்ளது. ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லவ்ரோவ் நேற்று அமெரிக்க தூதர் ஜோன் ஹண்ட்ஸ்மேனை அழைத்துள்ளார்.  அவரிட்ம், “செயிண்ட் பீட்டர்ஸ் பர்க் கில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் மூடப் படவேண்டும்.   அமெரிக்கா செய்ததைப் போல ரஷ்யாவும் அமெரிக்க அதிகாரிகள் 60 பேரை வெளியேற்றுகிறது”  என தெரிவித்துள்ளார்.

அத்துடன் செர்ஜி லவ்ரோவ் ”ரஷ்ய தூதரகத்தை மூடி ரஷ்ய அதிகாரிகளை வெளியேற்றிய மற்ற நாடுகள் மீதும் இதே நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.