மாஸ்கோ: ரஷ்யாவில் மேலும் 5,394 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் இதுவரை 1,82,50,596 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,93,048 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் ரஷ்ய நாட்டிலும் வெகு வேகமாக பரவி வருகிறது.

இந் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5,394 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 8,56,264 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு மேலும் 79 பேர் உயிரிழக்க மொத்த உயிரிழப்புகள் 14,207 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் பேர் 3,420 குணமடைந்தனர். இதுவரை 6,53,593 பேர்  சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா இப்போது 4வது இடத்தில் உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், 2ம் இடத்தில் பிரேசிலும், 3வது இடத்தில் இந்தியாவும் உள்ளன.