ரஷ்யாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: 8 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்த பாதிப்பு

--

மாஸ்கோ: ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 50 ஆயிரத்தை தாண்டி விட்டது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் இதுவரை 1,80,91,692 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 6,89,977 பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

இந் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5,427 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 8,50,870 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 70 பேர் உயிரிழக்க பலியானோர் எண்ணிக்கை 14,128 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் பேர் 8,114 குணமடைந்துள்ளனர். இது வரை 6,50,173 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,86,569 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா 4வது இடத்தில் உள்ளது, குறிப்பிடத்தக்கது.