விளையாட்டு போட்டிகளில் பங்குபெறும் வீரர்கள் ஊக்கமருந்துகள் எடுத்த விவகாரம் தொடர்பாக,  2020 ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக், 2022ம் ஆண்டு கத்தாரில் நடைபெற உள்ள உலக கோப்பை போட்டிகளின்போது,  ரஷ்ய கொடி மற்றும் ரஷிய தேசிய கீதம் பயன்படுத்த ‘வாடா’ எனப்படும் உலக ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் (World Anti-Doping Agency (WADA) தடை விதித்து உள்ளது.

உலக நாடுகள் பெரிதும் எதிர்பார்க்கும் ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறு கிறது. அடுத்த ஒலிம்பிக் போட்டி 2020ம் ஆண்டு  ஜப்பானில் உள்ள டோக்கியோ நகரில் நடக்க உள்ளது. அதற்காக ஏற்பாடுகளை  ஜப்பான் அரசு செய்து வருகிறது. அதன்படி, 2020ம் ஆண்டு  ஜூலை மாதம் 24-ந்தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 9-ந்தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது.

அதுபோல வரும்  2022ஆம் கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெற உள்ளது. அதன்படி போட்டிகளி 2022ம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி முதல் டிசம்பர் 18ஆம் தேதி வரை நடைபெறவள்ளது.

இந்த நிலையில், ரஷிய வீரர்கள் ஏற்கனவே நடைபெற்ற போட்டிகளின் போது ஊக்கமருந்து உட்கொண்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து ஆய்வு நடத்தியதில், ஊக்கமருந்து உட்கொண்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து,  உலக ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் (World Anti-Doping Agency (WADA – வாடா) அனைத்து முக்கிய விளையாட்டு நிகழ்வுகளிலிருந்தும் ரஷ்யாவிற்கு நான்கு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2020ம் ஆண்டு ஜப்பானில் நடைபெற உள்ள டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் கத்தாரில் 2022ம் ஆண்டு நடைபெறும் பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போன்ற நிகழ்வுகளில் ரஷ்யா கொடி மற்றும் கீதம் அனுமதிக்கப்படாது என்று அதிரடியாக தெரிவித்து உள்ளது.