மாஸ்கோ

விண்வெளியில் சொகுசு விடுதி ஒன்றை மாஸ்கோ அமைக்க உள்ளது.

பதினேழு ஐரோப்பிய நாடுகளின் கூட்டு முயற்சியில் பூமியில் இருந்து சுமார் 400 மைல் உயரத்தில் சர்வதேச விண்வெளி ஆய்வகம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.  இதற்காக இதுவரை சுமார் ரூ.96 லட்சத்து 75 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுளது.   அங்கு ஒரு 5 நட்சத்திர சொகுசு விடுதி ஒன்றை ரஷ்ய நாடு கட்ட உள்ளது.

இங்கு மொத்தம் 4 அறைகள் மட்டுமே இருக்கும்.   தவிர மருத்துவ வசதி, உடற்பயிற்சிக் கூடம், வைஃபை வசதி ஆகியவைகளும் அமைக்கப்பட உள்ளது.   சுற்றுலாப்பயணிகள் இங்கு சென்று வர சுமார் ரூ.300 கோடி செலவாகும்.  ஒரு வாரம் முதல் இரண்டு வாரங்கள் வரை தங்க ஆகும் செலவு இது என கூறப்படுகிறது.   அங்கு தங்குபவர்கள் விண்வெளியில் நடந்து செல்ல அந்த ஆய்வகத்தில் உள்ள வீரர்கள் உதவுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.