மாஸ்கோ:
ஷியா அதிபர் எதிராக போராட்டம் நடத்திய 5 ஆயிரம் பேர் கைது செய்யபட்டனர்.

ரஷியாவில் முக்கிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி நச்சு தாக்குதல் காரணமாக நவால்னி கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், மாஸ்கோ விமான நிலையம் வந்த அவரை மோசடி வழக்கு ஒன்றில் பரோல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் போலீசார் கைது செய்தனர். நவால்னி கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் நவால்னியை விடுதலை செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டங்களை ஒடுக்குவதற்காக தலைநகர் மாஸ்கோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அந்த நகரங்களை பாதுகாப்பு படையினர் முடக்கினார்கள். மேலும் அங்கு போராட்டம் நடத்திய 5 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்தனர்.