ரஷ்யா வருமாறு டிரம்புக்கு புடின் அழைப்பு

ஜோகனஸ்பர்க்:

பின்லாந்து ஹெல்சின்கி நகரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இடையே வரலாற்று சிறப்புமிக்க முதல் சந்திப்பு நடைபெற்றது.

ஈரான், சிரியா உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து தொலைபேசி வழியான பேச்சு மட்டும் போதாது. அதனால் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்த மாஸ்கோவுக்கு வருமாறு டிரம்ப்புக்கு புடின் அழைப்பு விடுத்துள்ளார்.

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க தென் ஆப்ப்பிரிக்கா தலைநகர் ஜோகனஸ்பர்க் நகருக்கு வந்துள்ள புடின் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.