கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிபயங்கர ஏவுகணையாகிய ஆர்.எஸ்-28 சார்மாட்டின் (சாத்தான் 2) புகைப்படத்தை ரஷ்யா வெளியிட்டிருக்கிறது.

satan2

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணம் அல்லது பிரான்ஸ் தேசம் அளவுள்ள நிலப்பரப்பை ஒரு புல் பூண்டுகூட இல்லாமல் தரைமட்டமாக்கக்கூடிய வலிமை படைத்தது இந்த ஆர்.எஸ்-28 சார்மாட் ஏவுகணை. ரஷ்ய இராணுவம் இதை சாத்தான்-2 என்று செல்லப் பெயரிட்டு அழைக்கிறது.
இந்த ஏவுகணையின் இஞ்சின் பிடியு-99 கடந்த ஆகஸ்ட் மாதம் பரிசோதிக்கப்பட்டது. இதன் இதர பகுதிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பரிசோதிக்கப்படவிருக்கிறது. இந்த ஏவுகணை வரும் 2018-ஆம் ஆண்டு ரஷ்ய ராணுவத்துக்கு அர்ப்பணிக்கப்படும் என்று தெரிகிறது.