ரஷியாவில் ஒரே நாளில் 13,592 பேருக்கு கொரோனா: 125 பேர் பலி

மாஸ்கோ: ரஷியாவில் 24 மணி நேரத்தில் 13,592 ​பேருக்கு  கொரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது.

அந்நாட்டில் 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டின் சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, புதியதாக 13,592 பேருக்கு தொற்று உறுதி ஆகியுள்ளது. அதை தொடர்ந்து ஒட்டு மொத்த பாதிப்பு 13,12,310 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 125 பேர் உள்பட இதுவரை 22,722 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 10,24,235 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். அதிலும் 24 மணி நேரத்தில் மட்டும் 3,793 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

உலக நாடுகளில் கொரோனா தொற்றுகள் அதிகம் பதிவான நாடுகளில் ரஷியா 4வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.