ரஷியாவில் 18,648 பேருக்கு கொரோனா தொற்று: ஒரே நாளில் 355 பேர் உயிரிழப்பு

மாஸ்கோ: ரஷியாவில் 24 மணி நேரத்தில் 18,648 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்நாட்டில் கடந்த மாதம் கொரோனா பாதிப்பு குறைந்து காணப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் உச்சத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. அந் நாட்டு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, 24 மணி நேரத்தில் ரஷியாவில் புதிதாக 18,648 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 5,150 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். ஒட்டு மொத்தமாக 16,73,686 ஆக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 24 மணி நேரத்தில் 355 பேர் உள்பட மொத்தமாக 28,828 பேர் பலியாகி உள்ளனர்.

12,51,364 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 3,93,494 பேர் இன்னமும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 2,300 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.