மாஸ்கோ: ரஷ்யாவில் கொரோனா தொற்றால் மேலும் 19,851 பேர் பாதிக்கப்பட, ஒட்டு மொத்த எண்ணிக்கை 18.36 லட்சத்தை கடந்துள்ளது.

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், 2ம் இடத்தில் இந்தியாவும் உள்ளன. 3வது இடத்தில் பிரேசிலும் உள்ளன. இந் நிலையில் ரஷ்யாவில் சில நாட்களாக கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா 4வது இடத்தில் உள்ளது. அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 19,851 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,36,960 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 432 பேர் பலியாக ஒட்டு மொத்த உயிரிழப்பு 31 ஆயிரத்து 593 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 13,69,357 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்னமும் 4,36,010 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.