மாஸ்கோ: ரஷியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 25 லட்சம் பேரில் 20 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

ரஷியாவில் கொரோனா தொற்று ஒருபக்கம் அதிகரிக்க, அதிகரிக்க, மறு பக்கம் குணம் பெறுவோர் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. 24 மணி நேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு விவரங்களை அந்நாடு வெளியிட்டு உள்ளது.

அதன்படி, புதியதாக 26,190 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து மொத்த பாதிப்பு 25,41,199 ஆக உள்ளது. மாஸ்கோவில் மட்டும் புதியதாக 5,145பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

24 மணி நேரத்தில் 559 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை 20,07,792 பேர் முழு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இன்னமும், 4,88,689 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.