ரஷியாவில் புதியதாக 24,581 பேருக்கு கொரோனா பாதிப்பு: 401 பேர் உயிரிழப்பு

மாஸ்கோ: ரஷியாவில் 24 மணி நேரத்தில் 24,581 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரஷியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. 24 மணி நேரத்தில் 24,581பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதையடுத்து ஒட்டுமொத்த பாதிப்பு 20,89,329 ஆக உயர்ந்துள்ளது. அதே போன்று 24 மணி நேரத்தில் 401 பேர் உள்பட இதுவரை 36,179 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேநேரத்தில் தற்போதுவரை 15,95,443 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 4,57,707 பேர் சிகிச்சையில் உள்ளனர். தலைநகர் மாஸ்கோவில் புதியதாக 6,575 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.