ரஷியாவில் 24 மணி நேரத்தில் 26,338 பேருக்கு கொரோனா: 40 ஆயிரத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை

மாஸ்கோ: ரஷியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 26,338 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

ரஷியாவில் சில வாரங்களாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாள்தோறும் உச்சக்கட்டத்தில் உள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வரும் அதே வேளையில் பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டு சுகாதாரத் துறை கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, புதியதாக 26,338 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து ஒட்டு மொத்த பாதிப்பு 22,95,654 ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் மாஸ்கோவில் 6,511 பேர் புதியதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 368 பேர் உள்பட இதுவரை 39,895 பேர் பலியாகி உள்ளனர்.

17,78,704 பேர் முழுமையாக குணம் அடைந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி 4,77,055 பேர் இன்னமும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.