மாஸ்கோ: ரஷ்யாவில் இன்று மேலும் 5,509 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகளவில் கொரோனா தொற்றால் இதுவரை 2,92,19,034 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 9,29,086 பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவிலும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் அந்நாட்டில் 24 மணி நேரத்தில் மேலும் 5,509 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில்  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 10,68,320 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு மேலும் 57 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 18,635 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 2,475 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 8,78,700 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது 1,70,985 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா 4வது இடத்தில் உள்ளது.