ரஷ்யாவில் கொரோனா தொற்றுகள் எண்ணிக்கை அதிகரிப்பு: ஒரே நாளில் 6632 பேருக்கு பாதிப்பு

மாஸ்கோ: ரஷ்யாவில் 6,75,000 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. அதிகப்பட்ச பாதிப்புகளுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் பிரேசில் இருக்கிறது.

இந் நிலையில் ரஷ்யாவில் 6,632 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,74,515 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 168 பேர் இறந்துவிட்டதாக அந்நாட்டு சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஒட்டுமொத்தமாக இதுவரை 10,027ஆக பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இதேபோல, இந்தோனேசியாவில் 1,447 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,447 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சக  அதிகாரி அக்மத் யூரியான்டோ தெரிவித்தார்.