ரஷியாவில் உச்சக்கட்ட கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 29 ஆயிரம் பேருக்கு தொற்று

மாஸ்கோ: ரஷியாவில் புதிய உச்சமாக ஒரே நாளில் புதிதாக 29,350 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் 5,792 பேருக்கு கொரோனா தொற்றுக்கான எவ்வித அறிகுறியும் தென்படவில்லை. இந்த பாதிப்புடன் சேர்ந்து, ரஷியாவில் ஒட்டு மொத்தமாக கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 28,77,727 ஆக உயர்ந்துள்ளது.

புதியதாக அதிகபட்சமாக செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் 3,752 பேரும், மாஸ்கோவில் 1,523 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 50,242 ஆக உயர்ந்து உள்ளது. ஒட்டு மொத்தமாக கொரோனா பாதிப்பில் புதிய உச்சத்தை ரஷியா தொட்டிருக்கிறது.

You may have missed