அக்டோபர் மாதத்தில் இருந்து மக்களுக்கு தடுப்பு மருந்து வழங்க தயாராகும் ரஷ்யா

ரஷ்யாவின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ, மாஸ்கோவில் உள்ள மாநில ஆராய்ச்சி நிலையமான கமலேயா நிறுவனம் அவர்களது தடுப்பு மருந்தின் மருத்துவ பரிசோதனைகளை முடித்துவிட்டதாகவும், அதை பதிவு செய்யும் எழுத்துப்பணிகள் நடந்து வருவதாகவும் அறிவித்தார்.

தனித்துவ கொரோனா வைரஸுக்கு எதிரான ரஷ்ய தடுப்புமருந்தின் மருத்துவப் பரிசோதனைகள் முடிந்துவிட்டதால், பெரும் அளவிலான மக்களுக்கு தடுப்பு மருந்துகளை 2020 அக்டோபர் மாதத்தில் இருந்து வழங்க,  தயாராகி வருவதாக ரஷ்யாவின் சுகாதார அமைச்சர் கூறியதாக  உள்ளூர் செய்தி நிறுவனங்கள் சனிக்கிழமையன்று செய்தி வெளியிட்டன. சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ, மாஸ்கோவில் உள்ள மாநில ஆராய்ச்சி நிலையமான கமலேயா நிறுவனம் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளை முடித்துவிட்டதாகவும், வெளியிடுவதற்கான எழுத்து பணிகள் நடைபெற்று வருவதாகவும் அறிவித்தார். மருந்துகள் வழங்கப்படும்போது, மருத்துவர்களும், ஆசிரியர்களும் முன்னுரிமை அளிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பெரும் அளவிலான தடுப்பு மருந்து வழங்கலைத் அக்டோபரில் இருந்து தொடங்க நாங்கள் திட்டமிட்டு வருகிறோம்” என்று முராஷ்கோ கூறியுள்ளார். ரஷ்யாவின் முதல் சாத்தியமான கோவிட் -19 தடுப்பு மருந்து ஆகஸ்ட் மாதத்தில் உள்ளூர் ஒழுங்குமுறை ஒப்புதலைப் பெறும் என்றும் விரைவில் சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. கமலேயா நிறுவனம் அடினோவைரஸ் சார்ந்த தடுப்பு மருந்து ஒன்றை உருவாக்கி வருகிறது.

ஆயினும்கூட ரஷ்யா தடுப்பு மருந்து தயாரிப்பு, சோதனை மற்றும் வெளியிடுவதில் காட்டி வரும் வேகம் சில மேற்க்கத்திய ஊடகங்களில் சந்தகக் கண் கொண்டு கேள்விகளை எழுப்ப வைத்துள்ளது. இந்த ஊடகங்களில், ரஷ்யா சர்வதேச அளவில் தன் பெருமையைக் காட்டிக் கொள்ள அறிவியல் மற்றும் பாதுகாப்பை பிணையம் வைக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைவர் கிரில் டிமிட்ரிவ், சோவியத் யூனியனின் 1957 ஆம் ஆண்டின் உலகின் முதல் செயற்கைக்கோளான ஸ்பூட்னிக் 1 ஐ ஏவியதைப் போன்றே, ரஷ்யா இந்த தடுப்பு மருந்து தயாரிப்பிலும் வென்றுள்ளது என்று கூறி ஒப்பிட்டார்.

கடந்த சனிக்கிழமையன்று, கொரோனா வைரஸ் காரணமாக மேலும்,  95 பேர்  இறந்துபோனதாக ரஷ்யா அறிவித்தது, இதன்மூலம் இதுவரை, 14,058 பேர் இறந்துள்ளதாகவும், 5,462 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை, ரஷ்யாவில் மொத்தம் 845,443 பேர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவிட் -19 தொற்றுநோயைத் தடுக்க உலகெங்கிலும் 100-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் உருவாக்கப்படுகின்றன.

அதே சமயம், உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுகளின்படி, இதுவரை, குறைந்தபட்சமாக சீனாவில் மூன்று மற்றும் பிரிட்டனில் ஒன்று என நான்கு தடுப்பு மருந்துகளே மூன்றாம் கட்ட மனித மருத்துவ சோதனைகளை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Thank you: Hindustan Times

கார்ட்டூன் கேலரி